கோவை மாநகர காவல்துறை அதிகாரிகளுடன் டி ஜி பி சங்கர் ஜிவால் ஆலோசனை

கோவை மாநகர காவல்துறை அதிகாரிகளுடன் டி ஜி பி  சங்கர் ஜிவால் ஆலோசனை
X

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்த போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜிவால் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக வருகை புரிந்தார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த சங்கர் ஜிவாலுக்கு காவல் துறையினர் மரியாதை செலுத்தி வரவேற்றனர் இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணைய இயக்குநர் அஜய் பட்நாக்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் ஸ்டாலின் உட்பட கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை மாநகர காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!