சைபர் கிரைம் விழிப்புணர்வு: கோவையிலிருந்து காத்மாண்டு வரை மோட்டார்சைக்கிள் பேரணி

சைபர் கிரைம் விழிப்புணர்வு: கோவையிலிருந்து காத்மாண்டு வரை மோட்டார்சைக்கிள் பேரணி
X

சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை முதல் காத்மாண்டு வரை பைக் பயணத்தை தொடங்கி வைத்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கோவையிலிருந்து 6 இளைஞர்கள் காத்மாண்டு வரை மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

பெண்களிடம் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கோவையிலிருந்து காத்மாண்டுவரை 7,000 கி.மீ. தூர மோட்டார் சைக்கிள் பேரணி கோவையில் புதன்கிழமை தொடங்கியது. இந்த பேரணியை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த பேரணியை தொடங்கி வைத்த மாநகர காவல் ஆணையாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கோவை மாநகரைப் பொறுத்தவரை சைபர் கிரைம் குற்றங்கள் நடப்பதற்கு முன்னதாகவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்களில் பண இழப்பு ஏற்பட்டாலும், அதனை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

சைபர் கிரைம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வெகு தொலைவில் உள்ள குற்றவாளிகளும் கைது செய்யப்படுகின்றனர். பெண்களுக்கு எதிராக நடைபெறும் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவையிலிருந்து 6 இளைஞர்கள் காத்மாண்டு வரை சுமார் 7,000 கி.மீ. தூரத்திற்கு மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

கல்லூரி மாணவ, மாணவியர் சமூக வலைதளங்களை கவனமாக கையாளுதல், எத்தகைய தகவல்களை பரிமாறக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக குறிப்பிட்ட சில மொபைல் செயலிகளை பயன்படுத்தி பணம் பறிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் ஒரு மாதத்துக்கு 500 சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகின்றன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்குவதால் கோவை மாநகரில் 500 மீட்டருக்கு ஒரு தடுப்பு அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, கோவை- அவிநாசி சாலையில் அதிவேக பயணத்தை தடுப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்