Covid Vaccine Camp in Coimbatore Today-கோவையில் 28-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்..!

Covid Vaccine Camp in Coimbatore Today-கோவையில் 28-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்..!
X
கோவையில் கடந்த 2022ம் ஆண்டில் கொரோனா பரவலின்போது பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

Covid Vaccine Camp in Coimbatore Today

கோவை:

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவா்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தடுப்பூசி முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Covid Vaccine Camp in Coimbatore Today

இந்நிலையில் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத் துறை திட்டமிட்டது. அனைத்து மாவட்டங்களிலும் 28-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,081 மையங்கள், மாநகராட்சியில் 325 மையங்கள், நகராட்சிகளில் 109 மையங்கள் என மொத்தம் 1,515 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Covid Vaccine Camp in Coimbatore Today

3.50 லட்சம் தடுப்பூசிகள்

இதற்காக 3.50 லட்சம் தடுப்பூசிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களும், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களும், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், முன்களப் பணியாளா்களில் தகுதியானவா்கள் பூஸ்டர் தடுப்பூசியையும் சிறப்பு முகாமில் செலுத்திக்கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட 27,78,885 பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 24,97,706 பேர் 2-வது தவணை தடுப்பூசியையும், 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 1,33,195 பேரும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 69,531 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.

இந்த முகாம் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முதன்மை கல்வி அலுவலர்கள், தனியார் பயிற்சி நிலைய செவிலியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

Covid Vaccine Camp in Coimbatore Today

நீலகிரி

இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 249 நிலையான கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் 20 நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம்களும் அமைக்கப்பட்டது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இந்த முகாமில் 1 தடுப்பூசி செலுத்துபவர் (கிராம சுகாதார செவிலியர்), 1 தரவு பதிவாளர், 2 அங்கன்வாடி பணியாளர்கள் (பயனாளிகளை அழைத்து வர) என மொத்தம் 4 பணியாளர்கள் ஒரு முகாமில் பணியில் ஈடுபட்டனர். மொத்தமாக 269 முகாம்களுக்கு 1076 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

Covid Vaccine Camp in Coimbatore Today

11,07,860 பேர்

இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். குறிப்பாக நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய சம்பந்தமான நோயுள்ளவர்கள், நுரையீரல் சம்பந்தமான நோயுள்ளவர்கள், கல்லீரல் சம்பந்தமான நோயுள்ளவர்கள், சிறுநீரகம் சம்பந்தமான நோயுள்ளவர்கள், தொடர்ச்சியாக நாள்பட்ட வியாதி உள்ளவர்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் என அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையை 5,62,567 பேரும், 2-ம் தவணையை 5,45,293 பேரும் என மொத்தம் 11,07,860 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story