கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்
உலக அளவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரு வருவதை அடுத்து நாடு முழுவதும் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பரிசோதனை உள்ளிட்ட கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 6 மாத காலத்துக்குத் தேவையான கொரோனா தடுப்பு மருந்துகள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தவும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பாதுகாப்பு கவச உடை பயன்பாடு, கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வருதல், விவரங்களை பதிவு செய்தல், சளி மாதிரி சேகரித்தல், பரிசோதனை, படுக்கைகள் ஒதுக்கீடு, சிகிச்சை அளித்தல் உள்ளிட்டவை குறித்து ஒத்திகை நடத்தப் பட்டது.
இதனை ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் தொடர்ந்து கொரோனா வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களையும் ஆய்வு செய்தார்.
அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 14 ஆக்ஸிஜன் படுக்கைகள், 11 சாதாரண படுக்கைகள் என 25 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா தடுப்பு மருந்துகள், தேவையான அளவு இருப்பு உள்ளதாகவும், நோயாளிகளின் வருகையின் அடிப்படையில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றம் கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக பொது மேலாளர் தீபக் ஜேக்கப், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் சந்திரா, துணை இயக்குநர் அருணா, மருத்துவர்கள்,செவிலியர்கள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu