குதிரையில் வந்து சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

குதிரையில் வந்து சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
X

குதிரையில் வந்த சுயேட்சை வேட்பாளர்.

வெற்றி பெற்றால் குதிரையை போல வேகமாக தனது வார்டு மக்களுக்காக உழைப்பேன் என தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. சிலர் வித்தியாசமான முறைகளில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 32வது வார்டில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட உள்ள மகேஷ்வரன், சிவானந்த காலனி பகுதியில் உள்ள பொறியியல் பிரிவு அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அவர் குதிரையில் வந்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டும் விதமாக குதிரையில் வந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் தான் வெற்றி பெற்றால் குதிரையை போல வேகமாக தனது வார்டு மக்களுக்காக உழைப்பேன் எனவும் தெரிவித்தார். இது அங்கிருந்தவர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!