தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு; செல்பி பாய்ண்ட்டுகளை துவக்கி வைத்த ஆட்சியர்
Coimbatore News- செல்பி எடுத்துக் கொண்ட அரசு அலுவலர்கள்
Coimbatore News, Coimbatore News Today- நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம் அரசு சார்பில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவு நடந்திடவும், வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அரசு சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் செல்பி பாய்ண்ட்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். முன்னதாக வாக்காளர் உறுதிமொழி, கையெழுத்து இயக்கத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர்கள், பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டனர். மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் செல்பி பாயிண்ட்டுகளில் குழுக்களாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த செல்பி பாய்ண்ட் மற்றும் கையெழுத்து இயக்க பேனர்கள் வைக்கப்பட உள்ளது. இந்த செல்பி பாயிண்ட்டில் "தேர்தல் பருவம்- தேசத்தின் பெருமிதம்", "நமது இலக்கு 100% வாக்குப்பதிவு", "என் ஓட்டு என் உரிமை"ஆகிய வாசகங்கள் அந்த பாதகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu