கோவையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : ஆட்சியர் உத்தரவு!

கோவையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : ஆட்சியர் உத்தரவு!
X

Coimbatore News- கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி 

Coimbatore News- இன்று ஒருநாள் மட்டும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே கோவை நகரில் மேகமூட்டம் காணப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு மேல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. பந்தய சாலை, உக்கடம், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், புலியகுளம், மசக்காளிபாளையம், பீளமேடு, சிங்காநல்லூர், இராமநாதபுரம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இந்த மழை காரணமாக அலுவலகம் முடிந்து வீடு திரும்புபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மழை காரணமாக குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இதனிடையே மழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை ஒருநாள் மட்டும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

Tags

Next Story