உலக முதியோர் தினக் கொண்டாட்டம் ; முதியோர்களுடன் படகு சவாரி செய்த ஆட்சியர்..!
படகு சவாரி செய்த ஆட்சியர் கிராந்திகுமார் பாடி
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு கோவையில் சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் முதியோர் தின விழா கோவை உக்கடம் பெரியகுளம் பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில், பல்வேறு முதியோர் இல்லங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இவ்விழாவின் சிறப்பம்சமாக உக்கடம் பெரியகுளத்தில், மாவட்ட ஆட்சியர் முதியோர்களுடன் படகு சவாரி செய்தார். அபோது ஒரு முதிய பெண்மணி என்னடி ராக்கம்மா பாடல் பாடி அசத்தினார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதியோர் இல்லங்களை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நினைவு பரிசினை வழங்கினார். நிகழ்வில் கலந்து கொண்ட முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதோடு வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் கண்காட்சியை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், முதியோர் நலனுக்காக மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது எனவும் இதனை மேலும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். இது போன்று முதியோர்கள் வெளியில் வருவதால் அவர்களுக்கு சமூகத்துடன் இணக்கம் ஏற்படும் எனவும் இளைஞர்களும் முதியவர்களுடன் இணைந்து கலந்துரையாடினால் நல்ல புரிதல் வரக்கூடும் என்றார்.
பின்னர் கோவையில் இரு தினங்களாக தொண்டாமுத்தூர், ஆனைக்கட்டி பகுதிகளில் மண் எடுப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறுத்தான கேள்விக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்ற வழிக்காட்டுதலின் படி மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய சேர்மன், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டதாகவும், 19 இடங்களில் ஆய்வு மேற்கொண்டதாக கூறினார். மேலும் அப்பகுதியில் தரம் குறித்தும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்படும் என கூறினார்.
ஆனைக்கட்டி பகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்ற போது அங்கு செயல்படும் தனியார் ரிசார்ட் சம்பந்தமாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டது குறித்தான கேள்விக்கு அந்த ரிசார்ட் மீது ஒரு சில பிரச்சினைகள் குறித்து மக்கள் சிலர் குறிப்பிட்டதாகவும், குறிப்பாக வழித்தடங்கள் குறித்து தெரிவித்ததாகவும் அது சம்பந்தமாக சேர்மன் முடிவெடுப்பார் என்றார். மேலும் ரிசார்ட் பிரச்சனை குறித்து தனியார் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் என பதிலளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu