கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திற்கு புதிய இயக்குநர் நியமனம்

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திற்கு புதிய இயக்குநர் நியமனம்
X

பைல் படம்

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனராக முனைவர் கோ. ஹேமப்ரபா பொறுப்பேற்றுக்கொண்டார்

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனராக முனைவர் கோ. ஹேமப்ரபா, கடந்த 27.10.2022 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார் . புதுதில்லியில் உள்ள வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தின் (AGRCICULTURAL SCIENTISTS RECRUITMENT BOARD) பரிந்துரையின் பேரில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் , பயிர் பெருக்கத்துறை விஞ்ஞானியான இவரை, வரும் 2024 வரை நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தார்.

111- ஆண்டுகள் பழமை வாய்ந்த கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் முதல் பெண் இயக்குனர், முனைவர் கோ ஹேமப்ரபா ஆவார். இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட 'கோ' (கோயம்புத்தூர்) இரகங்கள், நாட்டில் கரும்பு பயிரிடப்படும் நிலப்பரப்பில் 78 சதவீதத்திற்கும் மேல் ஆக்கிரமித்துள்ளன.

கரும்பு மரபணு முன்னேற்றத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சி அனுபவம் பெற்ற முனைவர் ஹேமபிரபா இதுவரை 27 கரும்பு இரகங்களை உருவாக்கி உள்ளார் . வட இந்தியாவில் கரும்பு சாகுபடியில் புரட்சியை ஏற்படுத்திய கோ 0238 இரகமும் தென்னிந்தியாவிற்கான சமீபத்திய குறுகிய கால இரகமான கோ 11015 இரகமும் , இவற்றில் குறிப்பிடத்தக் கவை ஆகும்.350 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள முனைவர் ஹேமபிரபா, கரும்பு ஆராய்ச்சிக்காக பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர்.

1912 இல் கோயமுத்தூரில் நிறுவப்பட்ட மத்திய ஆராய்ச்சி நிறுவனம்: கரும்பு இனப்பெருக்கம் ஆராய்ச்சி நிறுவனமானது (Sugarcane Breeding Research Institute) 1912 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின், கோயமுத்தூரில் நிறுவப்பட்டது மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்துடன் இணைக்கப்பட்டது. இது கரும்பு உற்பத்தியை பெருக்கும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும்தமாக நிறுவப்பட்டது. மேலும் நாட்டின் ஒரே கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் இது ஆகும்.

இந்நிறுவனம் அப்போதைய ஆங்கிலேய அரசாங்கத்தின் வேளாண் துறையின் நிதியுதவியுடன், சென்னை மாகாணத்தின் கீழ் கரும்பு ஆராய்ச்சி மையமாக நிறுவப்பட்டது.1932 இல், ஒரு புதிய மையமானது கர்னலில் வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதியுதவியுடன் துவக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு கண்ணூரில், கரும்புக்கான ஒரு புதிய ஆராய்ச்சி மையமானது உலகளாவிய கரும்பு வித்து சேகரிப்புக்காக நிறுவப்பட்டது இடம் பெற்றது.1969 இல் இந்த நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்துடன் இணைக்கப்பட்டது. 1999 இல், பாலக்காடு, அகாலியில் ஒரு புதிய ஆராய்ச்சி மையமாக செயல்பட்டத் துவங்கியது.

இந்தியாவின் கரும்பு சாகுபடி பரப்பளவில் 90% அதிகமாக பயிரிடப்படும் கரும்புவகைகள் இந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும். இந்த நிறுவனம் கரும்புகளின் மிதவெப்ப வகையை மேம்படுத்த முதல் முயற்சியில் கலப்பின ஒட்டுரகக் கரும்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டது. 1918 இல் ஆற்றோரம் வளர்ந்து நிற்கும் நாணல்களையும், நாட்டுக் கரும்பையும் கலப்பினமாகக்கொண்டு கோ 205 என்ற பெயரில் ஓர் ஒட்டுரகக் கரும்பை உருவாக்கினார்கள் இது கரும்பு மகசூலில் 50 சதவிகித்த்தை அதிகரித்தது.இந்த புதிய கரும்பு வகைகள் கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!