கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணனின் சேவையை பாராட்டி ரோட்டரி சங்கம் விருது...
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனின் சேவையை பாராட்டி ரோட்டரி சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளில் சற்று வித்தியாசமானவர் பாலகிருஷ்ணன் ஆவார். இவர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து உள்ளார். பணிபுரியம் இடங்களில் மாணவ, மாணவிகளை ஊக்குவித்தல், பொதுமக்களுக்கான பாதுகாப்பு வசதி, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவைகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்.
தற்போது, கோவை மாநகர காவல் ஆணையராக பதவி வகிக்கும் பாலகிருஷ்ணனின் சிறப்பான பணியை பல்வேறு தரப்பினர் பாராட்டி உள்ளனர். இந்தநிலையில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை பாராட்டும் விதமாக கோவை வடக்கு மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் மக்களின் காவல் ஆணையர் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க தலைவர் பிரபு, செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் திட்ட இயக்குநர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, காவல் ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு விருதை வழங்கினர். நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ரோட்டரி கோவை வடக்கு மாவட்ட தலைவர் பிரபு கூறியதாவது:
கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் பதவியேற்றது முதல் மாநகரின் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறைந்துள்ளது. தேவையான அனைத்து இடங்களிலும் வாகன ரோந்து மற்றும் போக்குவரத்து சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயல்படுவதால் இந்த விருதை அவருக்கு வழங்குகிறோம்.
மேலும், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான முறையில் நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ததுடன், கோவை மக்கள் அச்சமின்றி வாழ அனைத்து முயற்சிகளையும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்கொண்டார் என ரோட்டரி சங்க தலைவர் பிரபு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu