ஆனைமலையில் நடந்த ஜமாபந்தியில் கோவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.
ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகா அலுவலகங்களிலும் வருகிற 31-ந்தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று வருவாய் தீர்வாயம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் பெத்தநாயக்கனூர், தென்சித்தூர், சோமந்துறை, தென்சங்கம் பாளையம், ஆனைமலை ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர், காளியாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் பங்கேற்றனர். அவர்களிடம் முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விரைவு பட்டா மாற்றம், விலையில்லா வீட்டுமனைப்பட்டா ஆகியவை தொடர்பாக கோரிக்கை மனுக்களை கலெக்டர் நேரடியாக பெற்றுக்கொண்டார்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய கலெக்டர் கிராந்திகுமார்பாடி, 3 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சவுமியாஆனந்த், உதவி இயக்குநர் (நிலஅளவை) கோபாலகிருஷ்ணன், ஆனைமலை தாசில்தார் ரேணுகா தேவி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் இன்று (24-ந்தேதி) ஆத்துப்பொள்ளாச்சி, மார்ச்சநாயக்கன்பாளையம், அம்பாரம்பாளையம், சிங்காநல்லூர், நாயக்கன்பாளையம், வக்கம்பாளையம், பெரியபோது, ஆகிய ஊராட்சிகளுக்கு ஜமா பந்தி நடைபெற்றது.
வருகிற 25-ந்தேதி சமத்தூர், பில்சின்னாம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், தளவாய்பாளையம், பழையூர், தென்குமாரபாளையம், வீரல்பட்டி, நல்லூர், தொண்டாமுத்தூர், கம்பா லப்பட்டி, கரியாஞ் செட்டிபாளையம், கோட்டூர், அங்காலக்குறிச்சி, துறையூர், ஜல்லிப்பட்டி, அர்த்தநாரிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும் வருவாய் தீர்வாயம் நடக்க உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu