பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்ட நிர்வாகம் தயார்: ஆட்சியர் பேட்டி

பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்ட நிர்வாகம் தயார்: ஆட்சியர் பேட்டி
X

பருவமழை முன்னேற்பாடு ஆலோசணைக் கூட்டம்.

24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த, ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தாரஸ் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாரஸ் அகமது , கோவை மாவட்ட நிர்வாகம் வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை சிறப்பாக எடுத்திருப்பதாகவும், தாலுக்கா வாரியாக பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை தொலைபேசி எண்கள் கொடுக்கபட்டிருக்கின்றன எனவும் கூறினார்.

24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே பிரச்சனை இருக்கும் பகுதிகளை நாளை பார்வையிட இருப்பதாகவும் கூறினார். மாவட்டம் முழுவதும் பருவ மழை பாதிப்புள்ள பகுதிகளில் மருத்துவர்கள் மற்றும் அவசர ஊர்திகள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சமீரான் பேசுகையில், வால்பாறை ,மேட்டுப்பாளையம், சிறுமுகை பவானி ஆற்றுப்பகுதி என 21 இடங்கள் குறைவான பதற்றம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில். சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், ஏழு நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கி இருப்பதாக தெரிவித்தார். எந்த பிரச்சனை வந்தாலும் உடனே அவர்களுக்கு உதவ முதல் நிலை மீட்பாளர்கள் 1835 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை இருப்பதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை எனவும், ஆசிரியர்களும் வரத்தேவையில்லை என்றார். அதே சமயம் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவித்தார். மாநகராட்சிப்பகுதியில் மேம்பாலங்களின் கீழ் மழை நீர் தேங்காமல் இருக்க குழுக்கள் அமைக்கப்பட்டு மின் மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராஜா கோபால் சுங்காராவும், மாநகரம் மற்றும் மாவட்டங்களில் காவல் துறையினர் தயார் நிலையில் இருப்பதாக ஆணையர் தீபக் தாமோதர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினமும் தெரிவித்தனர்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil