கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
பைல் படம்.
கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில், குறை தீர்ப்பு கூட்டம் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறும்.
அதில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். இந்நிலையில் நாளை நடைபெற இருந்த மாநகராட்சி குறை தீர் கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறாது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
மாநகராட்சியின் வார்டு எண்.1-க்குட்பட்ட எஸ்.பி.நகரில் உள்ள பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.20,000/- அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.
தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.4க்குட்பட்ட சரவணம்பட்டி முதல் துடியலூர் செல்லும் வழியில் சத்தி சாலை சென்றடையும் இணைப்புச் சாலையை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
உடன் காவல்துறை உதவி ஆணையர் (போக்குவரத்து) சிற்றரசு, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி பொறியாளர் சக்திவேல் ஆகியோர் உள்ளனர்.
மேயர் ஆய்வு
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட சத்தியமங்கலம் பிரதான சாலையில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலை உடனடியாக தூர்வார சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu