கோவை கிறிஸ்தவ ஆலையத்தில் பொங்கல் கொண்டாட்டம்.. ஏராளமானோர் பங்கேற்பு...
கோவை மலுமிச்சம்பட்டி சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலையத்தில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.
உழவர்களின் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும், உழைப்பை போற்றும் பண்டிகையாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் திருநாள் என்பதால் உலகம் முழுவதும் பொங்கல் விழா பல்வேறு இடங்களில் இன்று கொண்டாடப்பட்டது. ஜாதி, மத அடையாளங்களை விட்டு, அனைவரும் தமிழர்கள் என்ற அடைப்படையில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அனைத்து தரப்பினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நிலையில் கோவையில், மத நல்லிணகத்திற்கு எடுத்துகாட்டாக இஸ்லாமியர்கள் இணைந்து பேரூர் ஆதின வளாகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். இதேபோல, கோவையில் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் பொங்கல் பண்டிகையை கிறிஸ்தவர்கள் நடத்தி மீண்டும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உள்ளனர்.
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் சி.எஸ்.ஐ.கிறிஸ்து நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான பிரார்த்தனை நடைபெறும். அதன்படி இன்று பிரார்த்தனை நடைபெற்ற நிலையில், சிறப்பு பிரார்த்தனையாக தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக வழிபாடுகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பாரம்பரிய உடை அணிந்து, ஆலய வாசலில் சாணம் தெளித்து, கோலமிட்டு, மாவிலை, தோரணங்கள், மாட்டு வண்டி என தமிழ்வழி பண்பாடு இசை கருவிகளுடன் கிறிஸ்தவ பாடல்களை பாடி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். நிகழ்ச்சியில், பேசிய கிறிஸ்தவ போதகர், தமிழர்கள் என்ற அடிப்படையில் அனைத்து மதங்களையும் கடந்து மக்கள் இங்கு கூடி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
கிறிஸ்தவ ஆலைய வளாகத்தில் திருச்சபை மக்கள் சேர்ந்து வைத்த பொங்கல் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இந்த பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், ஆலய வளாகத்தில் மாட்டு வண்டி தயார் செய்து அதன் மீது ஏறி நின்று புகைப்புடம் எடுத்து மகிழ்ந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu