கோவை 39 வது வார்டு பாஜக வேட்பாளர் குப்பை சேகரித்தபடி தீவிர பிரச்சாரம்

கோவை 39 வது வார்டு பாஜக வேட்பாளர் குப்பை சேகரித்தபடி தீவிர பிரச்சாரம்
X

 செளமியா ராணி வாக்கு சேகரிப்பு

தூய்மை பணியாளர்களுடன் இணைந்து வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்தபடி சௌமியாராணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியின் 39 வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுபவர் சௌமியாராணி பிரதீப். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் 39 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகள் முறையாக சேகரிப்பதில்லை என பொதுமக்கள் தெரிவித்த நிலையில், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்தபடி சௌமியாராணி பிரச்சாரம் மேற்கொண்டார். குப்பைகளை சேகரித்தபடி துண்டு பிரசுரங்கள் கொடுத்து பா.ஜ.கவிற்கு வாக்களிக்கும்படி சௌமியாராணி பிரதீப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

துண்டு பிரசுரங்களில் தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் துவங்கி தரப்படும், 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ் அப் சேவை அமைத்து பிரச்சினைகள் தீர்க்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!