கோவையில் குரூப் 2 தேர்வு எழுத ஆர்வத்துடன் வந்த தேர்வர்கள்

கோவையில் குரூப் 2 தேர்வு எழுத  ஆர்வத்துடன் வந்த தேர்வர்கள்
X

தேர்வு எழுத வந்த தேர்வர்கள்

மொத்தம் 113 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. கோவையில் மட்டும் குரூப் 2 தேர்வை 33,490 பேர் எழுதுகின்றனர்.

தமிழகம் முழுவதும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று மாநிலம் முழுவதும் குரூப் 2 தேர்வுகள் நடைபெறுகிறது.

டி.என்.பி.எஸ்.சி, சார்பில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ.பி -ல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப கடந்த ஜூன் 20ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 2,327 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுத தமிழகம் முழுவதும் 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 2,763 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 113 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. கோவையில் மட்டும் குரூப் 2 தேர்வை 33,490 பேர் எழுதுகின்றனர்.

தேர்வு மையங்களில் வருவாய்த் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வர்கள் காலை 8.30க்குள் மையங்களுக்குள் வர அறிவுறுத்தப்பட்டனர். மணிக்கூண்டு பகுதி தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு அதிகாலை முதலே தேர்வர்கள் ஆர்வத்துடன் வந்தனர். அவர்கள் சோதனைக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தேர்வர்கள் ஆர்வத்துடன் தேர்வினை எழுதினார்கள். முறைகேடுகளை தவிர்க்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா