கோவையில் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த ம.நீ.ம.வேட்பாளர்

கோவையில் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த ம.நீ.ம.வேட்பாளர்
X

மாட்டு வண்டியில் வந்த கார்த்திகேயன்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்துக்கும் வகையில் மாட்டு வண்டியில் வந்தார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். கோவை மாநகராட்சிக்குட்பட்ட 81 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கார்த்திகேயன் (31) என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று கார்த்திகேயன் தனது வேட்பு மனுவை மத்திய மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மாட்டு வண்டியில் கட்சியின் சக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்துக்கும் வகையிலும், தனது பகுதியில் அதிகளவில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்ததாக கார்த்திகேயன் தெரிவித்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை இறுதி நாள் என்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய குவிந்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!