கோவையில் குண்டும், குழியுமான சாலைகள்: பொதுமக்கள் அவதி

கோவையில் குண்டும், குழியுமான சாலைகள்: பொதுமக்கள் அவதி
X

கோவையில் குண்டும் குழியுமாக உள்ள சாலை

பாதாள சாக்கடை மற்றும் பில்லூர் திட்டத்துக்கு தோண்டிய சாலைகள் சரி செய்யப்படாமல் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கோவைப்புதூரை சுற்றி 89, 90, 91-வது வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்கான குழாய்கள் பதிக்கப்படுகிறது. இதுதவிர பில்லூர் 3-வது திட்டத்துக்கான மேல்நிலை தொட்டி கோவைப்புதூரில் கட்டப்பட்டுள்ளதால் மேல்நிலை தொட்டிக்கு குடிநீரை கொண்டு செல்ல பகிர்மான குழாய் பதிக்கப்படுகிறது.

ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்ற பகுதியில் தார்சாலை அமைக்கப்படவில்லை. இந்நிலையில் குடிநீர் குழாய் பதிக்கவும் முக்கிய சாலைகள் தோண்டப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவையில் வி.எல்.பி. ஜானகி அம்மாள் கல்லூரி பகுதிகளிலும் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி உள்ளன. பாலக்காடு மெயின்ரோடு பகுதிகளும் குனியமுத்தூர் அரசு பள்ளி வரை குண்டும், குழியுமாக மாறி வருகிறது.

ஏற்கனவே புட்டுவிக்கி சாலையில் இந்த பணிகள் நடைபெறுவதால் அங்கும் குண்டும், குழியுமாகி வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். வாகனங்கள் செல்ல முயவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் கோவைப்புதூரில் இருசக்கர வாகனத்தில் வருபவர் உக்கம் ஆத்துப்பாலத்துக்கு வரும்போது தூசி படிந்து காணப்படுவதாக சமூகவலைத்தளங்களில் மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.

சாலைகளில் குழாய் பதிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் தார் அமைத்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். தென்மேற்கு பருவமழை கோவைபகுதியில் விரைவில் தொடங்க உள்ள நிலையில், மழை பெய்தால் சாலைகள் சேறும், சகதியுமாக மாறி விடும். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்லவே மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே விரைவாக தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் பல சாலைகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. குழாய் பதிக்கும் பணிகள் முடிவடையாததால் தார்சாலை அமைக்கப்படவில்லை. விரைவில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்