கோவையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்: ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்: ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு
X

சிறப்பு தடுப்பூசி முகாம்

கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையிலும் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாம்களில், முன்களப்பணியாளர்கள், 60வயதிற்கு மேற்ப்பட்ட இணை நோய் (நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்) உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி, 90 நாட்கள் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கோவையில் நடைபெற்று வரும் இந்த முகாமில் காலையில் இருந்தே, முன்களப் பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்ப்பட்டோர் ஆர்வமுடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!