விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி

விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
X

ஆறுதல் தெரிவித்த வானதி சீனிவாசன்

வீட்டிற்கு திரும்பிய போது, இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் நரேஷ் படுகாயம் அடைந்தார்

பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்தவர் நரேஷ். இவர் நேற்று கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணி பொது செயலாளரும், தனது நண்பருமான நாச்சிமுத்து என்பவருடன் மாதம்பட்டி பகுதியில் நடைபெற்ற கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரு சக்கர வாகனத்தில் மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது, இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் நரேஷ் படுகாயம் அடைந்தார்.

அவரை மீட்டு கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தகவல் அறிந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இந்நிலையில் இது குறித்த தகவல் அறிந்து மதியம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை திரும்பிய பாஜக தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று நரேஷின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.ரமேஷின் உடல் அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்த செல்லபட்ட போது முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடன் செல்ல முயன்றனர். இதனையடுத்து அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கொஞ்சம் கொஞ்சமாக வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!