வானதி சீனிவாசனை இழிவாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக புகார் மனு

வானதி சீனிவாசனை இழிவாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக புகார் மனு
X

Coimbatore News- பாஜக மகளிரணியினர் புகார்

Coimbatore News- வானதி சீனிவாசனை இழிவாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக புகார் மனு அளிக்கப்பட்டது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை பாரதிய ஜனதா கட்சியின் மாநகர மாவட்ட மகளிர் அணி தலைவராக ஜெயஸ்ரீ குன்னத் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது தலைமையில் 10க்கும் மேற்பட்ட பாஜக மகளிரணியினர், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தனர்.

அதில் சமூக வலைதளங்களில் பாஜகவின் தலைவர்கள் மீது அவதூறாக கருத்துக்கள் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்திருந்தனர். அதில் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட பெயரில் உள்ள நபர், குறிப்பிட்ட கணக்கில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியை பகிர்ந்து அதன் மேல் "நல்ல எழுச்சியை கொடுக்குமோ?" என்று அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாக தெரிவித்தார்.

மேலும் அந்த நபரின் கணக்கில் ஒரு குழந்தையின் புகைப்படத்தை பயன்படுத்தி அவரது தோற்றத்தை மறைத்து உள்ளார். எனவே சமூக வலைத் தளத்தில் பெண்ணியத்தை அவதூறாக பகிர்ந்து உள்ள மேற்படி நபரை யார் என்று கண்டு அறிந்து அவர் மீது வழக்கு பதிவு செய்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வண்ணத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

சமூக வலைதளங்களில் பாஜகவின் தலைவர்கள் மீது அவதூறாக கருத்துக்கள் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்திருந்தனர்.

Tags

Next Story