/* */

திமுகவை கண்டித்து வாழைப்பழங்களுடன் பாஜக நூதன பிரச்சாரம்

திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பொது மக்களை ஏமாற்றி விட்டதாக தெரிவித்தனர்.

HIGHLIGHTS

திமுகவை கண்டித்து வாழைப்பழங்களுடன் பாஜக நூதன பிரச்சாரம்
X

வாழைப்பழங்களுடன் பாஜக நூதன பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாயிலேயே வடை சுடுகிறார் எனக் கூறி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் உளுந்த வடை வழங்கி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் பிரதமர் மோடி புகைப்படத்துடன் உளுந்த வடை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி அளித்த எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இந்த பிரச்சாத்தில் ஈடுபட்டு வருவதாக திமுகவினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திமுகவின் வடை பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக சார்பில் வாழைப்பழம் கொடுக்கும் நூதன பிரச்சார இயக்கம் இன்று கோவையில் நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனியில் பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கையில் வாழைப்பழத்துடன் திரண்டனர். ஆனால் காவல் துறையினர் வாழைப்பழத்தை பொதுமக்களுக்கு வழங்க அனுமதி மறுத்தனர். அதையும் மீறி வாழைப்பழத்தை மக்களுக்கு வழங்கினால், கைது செய்ய நேரிடும் என எச்சரித்தனர். இதனையடுத்து பா.ஜ.கவினர் முதல்வர் ஸ்டாலின் முகமூடியையும், கையில் வாழைப்பழத்தையும் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பொது மக்களை ஏமாற்றி விட்டதாகவும், பொதுமக்களுக்கு வாழைப்பழத்தை கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

போராட்டத்தின் முடிவில் வாழைப்பழங்களை பொதுமக்களுக்கு கொடுக்க முடியாமல் போனதால், கொண்டு வந்திருந்த பழங்களை மக்கள் சார்பில் தாங்களே சாப்பிடுவதாக கூறி வாழைப்பழங்களை பாஜகவினர் சாப்பிட்டு விட்டு அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.

Updated On: 7 March 2024 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு