கோவை விமான நிலைய கார்பார்க்கிங்கில் நின்ற காரில் துர்நாற்றம்
பைல் படம்.
கோவை பீளமேடு அருகே உள்ள சித்ராவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும், டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சென்னைக்கும் தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் நிறுத்துவதற்காக முன்புறம் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று காலை விமான நிலையம் முன்புறம் உள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காரில் இருந்து தூர்நாற்றம் வீசியது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மெக்கானிக் உதவியுடன் காரை திறந்து பார்த்தனர். காருக்கு ஒரு கைப்பை மட்டுமே இருந்தது. எங்கு இருந்து தூர் நாற்றம் வருகிறது என ஆய்வு செய்தனர்.
அப்போது காரின் உரிமையாளர் விமான நிலையத்துக்கு வரும் அவசரத்தில் காரை சாக்கடையில் விட்டு வந்ததால் கார் முழுவதும் தூர் நாற்றம் வீசியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் காரின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரின் உரிமையாளர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த டாக்டர் ரவி என்பது தெரிய வந்தது. அவர் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்து வரும் கருத்தரங்களில் கலந்து கொள்வதற்காக கோவையில் இருந்து விமானத்தில் செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார்.
விமானத்திற்கு நேரமானதால் டாக்டர் ரவி வேகமாக வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் சாக்கடையில் கார் விட்டுள்ளார். இதனால் காரில் தூர்நாற்றம் வந்தது தெரியவந்தது. விமான நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங் வந்ததும் காரை திறந்து வைத்து தூர்நாற்றத்தை போக்க நடவடிக்கை எடுத்து உள்ளார். அனால் விமானத்துக்கு செல்ல நேரமாகி விட்டதால் சென்று விட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். விமான நிலையம் முன்பு உள்ள கார் பார்க்கிங்களில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் இருந்து தூர்நாற்றம் வந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu