பைக் டாக்சியை தடை செய்ய கோரிக்கை ; ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டம்

பைக் டாக்சியை தடை செய்ய கோரிக்கை ; ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டம்
X

சிஐடியு போராட்டம் 

பைக் டாக்ஸி நடைமுறையை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவை சட்ட விரோதமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள், பைக் டாக்ஸி நடைமுறையை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பைக் டாக்ஸி நடைமுறையை தடை செய்த வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் மாநிலத் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ தொழிலாளர்கள், சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் ஆன்லைன் அபராத நடைமுறையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கூடாது, வாகன ஓட்டிகளை கொலை குற்றவாளிகளாக சித்தரிக்கும் BNS சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த கூடாது, மீட்டர் கட்டணத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும், சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த நிலையில் உரிய முன் அனுமதி இன்றி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட தலைவர் இரா. செல்வம் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்