கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் வாக்குவாதம் ; தனியார் பேருந்துகள் போராட்டம்

கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் வாக்குவாதம் ; தனியார் பேருந்துகள் போராட்டம்
X

Coimbatore News- பேருந்து ஊழியர்கள் வாக்குவாதம்

Coimbatore News- பேருந்து ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தனியார் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் நடத்தினர்

Coimbatore News, Coimbatore News Today- கோவை காந்திபுரத்தில் வெளியூர், விரைவு மற்றும் நகர பேருந்து நிலையம் என அருகில் மூன்று பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளன. இங்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் இங்கு நகரப் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தும் மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பயணிகள் மீது தனியார் பேருந்து இரும்பு தடுப்புகளை தாண்டி பொதுமக்கள் மீது மோதி 8 பேர் வரை படுகாயம் அடைந்தனர். இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவல் துறையினர் இரும்புத் தடுப்புகளால் விபத்து ஏற்படுகிறது என்று அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகளை அகற்றினர்.

இந்நிலையில் மீண்டும் அரசு மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்க போட்டு போட்டு கொண்டு முன்னுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதனை அகற்ற வேண்டுமென தனியார் பேருந்து ஊழியர்களும், அதை அகற்ற வேண்டாம் என அரசு பேருந்து ஊழியர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன.

இதைத் தொடர்ந்து விபத்து ஏற்படுவதாக கூறி போக்குவரத்து காவல் துறையினர் அங்கு அமைக்கப்பட்டு உள்ள இரும்புத் தடுப்புகளை அகற்றினர். இதனை அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் அங்கு சென்று மீண்டும் இரும்பு தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் இன்று காலை அரசு மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!