குப்பையில் போட்ட தங்கச் சங்கிலி மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளர்கள் ; மாநகராட்சி கூட்டத்தில் பாராட்டு

குப்பையில் போட்ட தங்கச் சங்கிலி மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளர்கள் ; மாநகராட்சி கூட்டத்தில் பாராட்டு

Coimbatore News- நகையை மீட்டு தந்த தூய்மை பணியாளர்கள்

Coimbatore News- நகையை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு இன்று நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது

Coimbatore News, Coimbatore News Today,- கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி (வயது 47). இவரது கணவர் இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது 7.5 பவுன் தங்க நகையை ஒரு கவரில் போட்டு வைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை போட்டு வைத்திருந்த கவரை அவர், தவறுதலாக குப்பையில் போட்டு தூய்மை பணியாளர்களிடம் கொடுத்தார்.‌ சிறிது நேரத்தில் அவர் தனது நகையை தேடி பார்த்தார். அப்போது தான் அவருக்கு குப்பையில் நகையை போட்டது தெரியவந்தது.‌

பின்னர் அவர் 98வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் உதவியுடன் நகையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தூய்மை பணி மேற்பார்வையாளர் மணிகண்டன், தூய்மை பணியாளர்கள் ராணி, சத்யா, சாவித்திரி ஆகியோர் அப்பகுதியில் சேகரித்த 1½ டன் குப்பையை கீழே கொட்டி தங்க நகையை கண்டுபிடித்து சிவகாமியிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் குப்பையில் போட்ட நகையை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு இன்று நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தூய்மை பணியாளர்கள் சம்பவத்தன்று காலை 10 மணி அளவில் வழக்கமாக குப்பைகளை தர பிரித்து சேகரித்து சென்றுள்ளனர். சிவகாமி இல்லத்தில் தங்கச் சங்கிலியை தேடி பார்த்தும் கிடைக்காத நேரத்தில் தூய்மை பணியாளிடம் விசாரித்துள்ளனர். பின்னர் தூய்மை பணியாளர்கள் சேகரித்த குப்பைகள் மட்டுமின்றி அந்த பகுதியை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளின் சேகரித்த குப்பைகளை தரையில் கொட்டி சுமார் ஆறு மணி நேரம் தேடி சங்கிலியை கண்டுபிடித்தனர்.

சங்கிலியை தொலைத்த சிவகாமி தூய்மை பணியாளரிடம் கண்கலங்கி சங்கிலியை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் விடாமல் அனைத்து குப்பைகளையும் ஒவ்வொன்றாக பிரித்து சங்கிலியை கண்டுபிடித்துள்ளனர். ஏழு பவுன் தங்கச் சங்கிலி எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.

Tags

Next Story