கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் : தனியார் நிறுவனம் கருத்துக் கணிப்பு
அண்ணமலை
கோவை ஆடிஸ் வீதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என இந்தியன் பொலிட்டிக்கல் டெமோகிரடிக் ஸ்டாடிஸ்டிக்ஸ் (IPDS ) என்ற நிறுவனம் சார்பில் கருத்துக்கணிப்பு வெளியிட இருந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தல் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பத்திரிகையாளர் மன்ற வாயிலில் வைத்து அந்த நிறுவனத்தினர் கருத்துகணிப்பை வெளியிட்டனர். IDBS அமைப்பின் முதன்மை செயல் அலுவலர் பிரபாகர் பத்திரிகையாளர் முன்னிலையில் அதனை வெளியிட்டார்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை திமுக சார்பில் போட்டியிடும் கணபதி ராஜ்குமார் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்களை முன்னிறுத்து கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் பேசிய அவர், கோவை மக்களவை தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பை சார்ந்த 3281 பேரிடம் கருத்து கணிப்பு கேட்கப்பட்டதாகவும், இந்த கருத்து கணிப்பில் வெற்றி வாய்ப்பு பாஜகவிற்கு அதிகம் என தெரிவித்தார். பாஜகவிற்கு 38.9% , திமுகவிற்கு 33.4% , அதிமுக விற்கு 18.5%, நாம் தமிழர் கட்சிக்கு 6.8%, மற்ற கட்சியினர் 2.5% வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும் அனைத்து சமுதாய மக்களும் அண்ணாமலைக்கு ஆதரவு அளித்திருப்பதால் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu