பிஜேபி சாதி வெறிபிடித்த கட்சி : அந்தியூர் செல்வராஜ் குற்றச்சாட்டு
கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் பேசிய அந்தியூர் செல்வராஜ்.
கோவை வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நல குழு நடத்தும் இளைஞர்கள் இளம் பெண்கள் தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், ”திமுக அணிகளில் ஆதிதிராவிடர் அணி சிறப்பாக உள்ளது. இதில் நான் கிளை தலைவராக இருந்து உள்ளேன்.என்னுடைய சொந்தகாரர் இந்த பகுதியில் இருந்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் இது போன்று அணிகள் இல்லை. பிஜேபி மதவாத ஜாதி வெறி பிடித்த கட்சி். வட நாட்டில் மாட்டு கறி தின்றால் ஜெயிலில் போட்டு விடுவார்கள். பேருக்கு தான் ஜனாதிபதி. இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு மரியாதை கிடைப்பது இல்லை.
முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கும் மரியாதை இல்லை. ஜனாதிபதி கோவிலுக்கு வந்து சென்றவுடன், கோவிலில், தண்ணீர் விட்டு கழுவினார்கள் அது தான் பிஜேபி. திமுக கட்சியில் மரியாதை அனைத்தும் கிடைக்கும். நான் ஒரு அருந்ததியர் இனத்தை சேர்ந்தவன், எனக்கு துணை பொதுச் செயலாளர் பதிவு கொடுத்துள்ளனர். இது தான் திமுக.
அருந்ததியர் படித்து முன்வர முடியாது மற்றவர்கள் பிடுங்கி கொள்கிறார்கள். எனவே, அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். இதற்கு, தமிழகம் முழுவதும் கலைஞர் அவர்களை வரவேற்று பேசினோம். நம்முடைய சமூகத்தினர் மாவட்ட ஆட்சியராக வந்து உள்ளனர், இன்னும் பல உயர் பதவிகள் வகித்து வருகின்றனர். நாமக்கலில் அருந்ததியினருக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது. எனவே, இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு இந்த தடவை முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu