7 நாள் குழந்தை அறுவை சிகிச்சை: 21/2 மணி நேரத்தில் திருச்சி டூ கோவை வந்த ஆம்புலன்ஸ்

7 நாள் குழந்தை அறுவை சிகிச்சை: 21/2 மணி நேரத்தில் திருச்சி டூ கோவை வந்த ஆம்புலன்ஸ்
X

மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தை

ஆம்புலன்ஸ் தங்கு தடையின்றி செல்வதற்காக, சாலை முழுவதும் கிரீன் காரிடார் ஏற்படுத்தி, காவல் துறையினர் வழிவகை செய்தனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில், பிறந்து 7 நாட்களே ஆன ஒரு குழந்தைக்கு, பிறவியிலேயே இருதய குறைபாடு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதன்படி மருத்துவ சிகிச்சை செய்ய கோவை ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் நவீன இயந்திரங்கள் இருப்பதால், கோவைக்கு அக்குழந்தையை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இன்று பிற்பகல் ஒரு மணி அளவில், திருச்சியில் இருந்து கிளம்பி ஆம்புலன்ஸ், காவல் துறை உதவியுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்காத வகையில் வேகமாக கோவையை நோக்கி முன்னேறியது. ஆம்புலன்ஸ் தங்கு தடையின்றி செல்வதற்காக, சாலை முழுவதும் கிரீன் காரிடார் ஏற்படுத்தி, காவல் துறையினர் வழிவகை செய்தனர்.

இதனால் இரண்டரை மணி நேரத்தில் குழந்தை பாதுகாப்பாக ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து அந்த குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்த பின்னர், மருத்துவ கண்காணிப்பில் வைத்து பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரண்டரை மணி நேரத்தில் குழந்தையை திருச்சியில் இருந்து கோவைக்கு அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு அந்த மருத்துவமனையில் இருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself