கோவையில் அக்ரி இன்டெக்ஸ் வேளாண் கண்காட்சி 11 ம் தேதி துவக்கம்
Coimbatore News- ஆக்ரி இன்டேக்ஸ் கண்காட்சி 11ல் துவக்கம்.
Coimbatore News, Coimbatore News Today- கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் அக்ரி இன்டெக்ஸ் 2024 என்ற 22 ஆம் ஆண்டு வேளாண் கண்காட்சி சர்வதேச அளவில் நடைபெற உள்ளது. இதற்காக கோவை கொடிசியா வளாகம் முழுவதும் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், “22 வது ஆண்டு ஒருங்கிணைந்த வேளாண் கண்காட்சி, கோவை கொடிசியா தொழில் கூட கண்காட்சி வளாகத்தில் வரும் 11 ம் தேதி துவங்கி 15 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
வழக்கமாக நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி, இந்த ஆண்டு ஐந்து நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நான்கு நாட்கள் போதிய அளவில் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்த நிலையில், அந்த கருத்தின் அடிப்படையில் ஐந்து நாட்களாக அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக 498 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
மலேசியா, சிங்கப்பூர், சீனா, தென்கொரியா உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் இருந்தும், இந்த கண்காட்சியில் அரங்கில் அமைத்து கலந்து கொள்ள உள்ளனர். மேலும் ஜப்பான் நாட்டிலிருந்து சிறப்பு வேளாண் குழுவினரும் அந்த கண்காட்சியில் பார்வையிட்டு, அவர்களுடைய பல்வேறு தொழில்நுட்பங்களையும் எடுத்துக் கூற உள்ளனர். இந்த கண்காட்சியில் எவ்வாறு ஒரு விவசாயி தங்களுடைய உற்பத்தி பொருளை சந்தைப்படுத்தி லாபம் பெற முடியும் அதற்கு என்னென்ன வழிகள் உள்ளது அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் என அனைத்தும் வழங்கப்பட உள்ளது. இந்த கண்காட்சி வளாகத்தில் கால்நடைகளுக்கு தனியாக அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளது. நீரின்றி விவசாயம் குறைந்த அளவில் நீரை பயன்படுத்தி விவசாயம் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களையும் காட்சிக்கு முன் வைக்க உள்ளோம்.
தொடர்ந்து தமிழக அரசும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இந்திய அளவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் அந்தந்த மாநிலங்களின் வேளாண்துறை மற்றும் மத்திய அரசு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு வேளாண் துறை சம்பந்தமான அனைத்து விளக்கங்களையும் வாங்கி தொழில் நுட்பங்களையும் கண்காட்சிக்கு வைக்க உள்ளனர். சுமார் ஒன்னரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu