அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தை: உதவிக்கரம் நீட்ட கோரிக்கை
குழந்தையுடன் மனு அளிக்க வந்த பெற்றோர்.
கோவை சிந்தாமணிபுதூர் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்- நித்யாதேவி தம்பதியினர். இவர்களின் இரண்டரை வயதான இளைய மகள் தனது சிறு வயதில் இருந்து சுறு சுறுப்பாக இல்லாமலும், நடக்க முடியாமலும் இருந்து வந்து உள்ளார். இதனை அறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து உள்ளனர்.இந்த சிகிச்சையில் எவ்வித பயனும் கிடைக்காததால், பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு உள்ளனர்.
அப்போது குழந்தைக்கு மரபணு சோதனை முடிவில் SMA எனும் முதுகெலும்பு தசை சிதைவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த அரிய வகை நோய்க்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூர் பப்டிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதை அறிந்த பெற்றோர்கள் அங்கு சென்று உள்ளனர். அப்போது மருத்துவர் இடையே ஆலோசனை பெற்ற போது தான் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு சிகிச்சை அளிக்கா விட்டால் உயிர் போகும் அபாயமும் ஏற்படும் எனவும், இந்த நோய்க்கு இந்தியாவில் மருந்து இல்லாததால் ஸ்விட்சர்லாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், இந்த மருந்துக்கு ரூபாய் 16 கோடி வரை செலவாகும் என தெரிவித்து உள்ளனர். எனவே இந்த அரிய வகை நோயில் இருந்து தங்களது குழந்தையை காப்பாற்ற தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் எனவும், இதனை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu