கோவை சுந்தராபுரத்தில் தயாராகி வருகிறது புதிய போலீஸ் நிலையம்

கோவை சுந்தராபுரத்தில் தயாராகி வரும் போலீஸ் நிலையம்.
கோவை சுந்தராபுரத்தில் புதிய போலீஸ் நிலையம் தயாராகி வருகிறது.
கோவை மாநகர எல்லைக்குட்பட்ட கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் பகுதிகளில் புதிய போலீஸ் நிலையங்கள் அமைப்பதற்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அந்த 3 பகுதிகளிலும் புதிய போலீஸ் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவை சுந்தராபுரத்தில் சிட்கோ இண்டோசல் மெயின் ரோட்டில்(பேஸ் டூ) போலீஸ் நிலையம் தயாராகி வருகிறது. இந்த போலீஸ் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த போலீஸ் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர், 30 காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் ஏதேனும் குற்ற சம்பவம் நடைபெறுமோ என பொதுமக்கள் தயங்கி வந்தனர். தற்போது இங்கு புதிதாக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது. இதன் மூலம் இங்கு குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்த முடியும். மேலும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்கும் போலீஸ் நிலையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu