கோவையில் பல ஆண்டுகளாக குப்பைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த தாய், மகள்

கோவையில் பல ஆண்டுகளாக குப்பைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த தாய், மகள்
X

சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட  மாநகராட்சி ஊழியர்கள்.

கோவை அடுக்குமாடி குடியிருப்பில் தாயும், மகளும் குப்பைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

கோவை ராம் நகர் பகுதியில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் ருக்மணி. அவரது மகள் திவ்யா. வயதான நிலையில் இருக்கும் இருவரும் பல ஆண்டுகளாக வீட்டை சுத்தம் செய்யாமல் குப்பை கூளங்ளுக்கு மத்தியில் வாழ்த்து வருகின்றனர். பல வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல், அக்கம் பக்கத்தினர் யாருடனும் எந்த விதமான தொடர்பும் இல்லாமல் இருந்து வருவதாக தகவல் பரவியது.

இது குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் நேற்று அந்த பெண்களின் வீட்டிற்குள் சென்று, அவர்களிடம் பேசியபடி வீட்டில் போட்டு வைத்துள்ள குப்பை குளங்களை செல்போனில் படம் எடுத்துள்ளார். பின்னர் இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கும் அவர் தகவல் அளித்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை சுத்தம் செய்யவும், இரு பெண்களையும் மனநல ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங் செய்து அவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் இருக்கின்றதா என ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனவும் அந்த குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு பெண்கள் குப்பைகளுக்கு இடையே பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற மாநகராட்சி பணியாளர்கள் அந்த வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இவர்கள் இருவரும் இப்படி குப்பை கூளங்களுக்கு மத்தியில் வசிப்பதற்கு காரணம் என்ன? அவர்களுக்கு யாரும் உதவுவதற்கு ஆள் இல்லையா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil