கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் உருண்டு மனு அளித்த கூலி தொழிலாளி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் உருண்டு மனு அளித்த கூலி தொழிலாளி
X

உருண்டு புரண்டு மனு அளித்த கூலித் தொழிலாளி.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் உருண்டு புரண்டு கண்ணீர் மல்க கூலி தொழிலாளி மனு அளித்து உள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கோவை மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரது வீட்டை புதுப்பிப்பதற்காக 57 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு மாணிக்கம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 5 ஆயிரம் ரூபாயை முன் பணமாக செலுத்திய ராம்குமார், மீதம் உள்ள பணத்தை வேலை முடிந்ததும் கொடுத்து விடுவதாக மாணிக்கத்திடம் உறுதியளித்து உள்ளார். இந்த நிலையில், வேலை முடிந்தும், மீத சம்பளத் தொகையை (52,000) கொடுக்காமல், வீட்டு உரிமையாளர் ராம்குமார் தன்னை ஏமாற்றுவதாக மாணிக்கம் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தும், மனு மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்று மாணிக்கம் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார். மேலும், தனது மனுவை விசாரிக்க உதவுமாறு தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். தனது கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!