மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் குறித்த ஐந்து நாள் விழிப்புணர்வு கண்காட்சி நிறைவு

மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் குறித்த ஐந்து நாள் விழிப்புணர்வு கண்காட்சி நிறைவு
X

Coimbatore News- மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் கண்காட்சி நடந்தது.

Coimbatore News- மத்திய அரசின் 'மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள்' குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

Coimbatore News, Coimbatore News Today- இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், கோவை மாநகரில் மத்திய அரசின் 'மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள்' குறித்த விழிப்புணர்வு கண்காட்சி, கோவை அவினாசி சாலை, வஉசி பூங்கா அருகில் உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

5 நாட்கள் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கண்காட்சியில், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி, ஆதார் திருத்தம், விழிப்புணர்வு திரைப்படங்கள், கருத்தரங்கு, பல்துறை சார்ந்த அரங்குகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்றன.

இன்று நடைபெற்ற நிறைவு நிகழ்வில், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரங்குகளை பார்வையிட்டார். நிகழ்வில் சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், இந்த கண்காட்சியை பார்வையிட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசின் திட்டங்கள் குறித்து பெற்றோர்களிடம் நண்பர்களிடமும் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், இளைஞர் சக்தி தான் இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டு செல்லும் எனவும் பேசினார். இதில், மாவட்ட முன்னோடி வங்கி, இந்திய தர நிர்ணய அமைவனம், மாவட்ட சமூக நலத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு