அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கோவை பெண்ணிடம் ரூ.23 லட்சம் பணம் மோசடி

அறநிலைய துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கோவை பெண்ணிடம் ரூ.23 லட்சம் பணம் மோசடி செய்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை அருகே உள்ள ராக்கிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் கலைச்செல்வி (வயது 30). இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது கலைச் செல்விக்கு பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர் இளம்பெண்ணிடம் தான் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறினார். மேலும் இந்து அறநிலையத்துறையில் வேலை இருப்பதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும் தெரிந்த அதிகாரிகள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார்.
இதனை உண்மை என நம்பிய கலைச்செல்வி ரூ.23 லட்சம் பணத்தை தயார் செய்து சரவணகுமாரிடம கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட இவர் போலியான ஆவணங்களை தயார் செய்து பணி நியமன ஆணையை கலைச்செல்வியிடம் கொடுத்தார். அதனை இந்து அறநிலை யத்துறை அலுவலகத்துக்கு சென்று சரி பார்த்த போது அது போலியானது என்பது தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கலைச்செல்வி இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இந்து அறநிலையத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த சரவண குமார் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu