கோவையில் 9ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது வழக்கு

கோவையில் 9ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது வழக்கு
X
கோவையில் 9ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் உள்ளனர்.

கோவையில் 9ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் கூலி வேலை செய்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் இருந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாணவி அந்த பகுதியில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார். அப்போது சிறுமிக்கு ஏ.பி.எஸ். காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுசீந்திரன் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

அப்போது சுசீந்திரன் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து அவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக மாணவி வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். அப்போது மாணவியை அவரது தாய் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர். அவர்கள் இது குறித்து மாணவியின் தாயிடம் தெரிவித்தனர். அவர் தனது மகளிடம் விசாரித்தார். அப்போது சுசீந்திரன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் 9-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சுசீந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags

Next Story