கோவை அருகே நாய் குறுக்கே ஓடியதால் நடந்த விபத்தில் தீ பிடித்த கார்

தீ பிடித்து எரிந்த கார் (கோப்பு படம்).
கோவை அருகே நாய் குறுக்கே ஓடியதால் ஏற்பட்ட விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது.
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரில் சூலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை முத்து கவுண்டம்புதூரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளனர். அப்போது மண்டபம் அருகே வரும் பொழுது நாய் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர். கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.
உடனடியாக காரில் இருந்து இறங்கிய ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயை அணைப்பதற்கு முயற்சித்தும் முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக கார் டிரைவரும், கார் உரிமையாளர் ரமேசும் உயிர் தப்பினர். இது தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் குறுக்கே சென்றதால் கார் புளியமரத்தின் மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான விபத்துக்களுக்கு சாலையின் குறுக்கே போகும் மாடு ஆடு உள்ளிட்ட விலங்குகள் மற்றும் நாய் போன்றவை தான் காரணமாக உள்ளன. இவற்றின் நடமாட்டத்தினால் சில நேரங்களில் உயிர்ப்பலி விபத்துக்களும் ஏற்பட்டு விடுவது உண்டு. எனவே சாலைகளில் விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu