வரவேற்பும், ஏமாற்றமும் நிறைந்த பட்ஜெட் - தொழில் அமைப்பினர் கருத்து
டேக்ட் தலைவர் ஜேம்ஸ்
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கோவை குறிச்சி பகுதியில் 4 அடுக்குகளை கொண்ட அடுக்குமாடி ஆயத்த தொழில் வளாகம் அமைக்கப்படும், கோவை, திருப்பூரின் முதன்மை நதியான நொய்யல் புனரமைப்புக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும், கோயம்புத்தூரில் அறிவியல் மையத்துடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி ஆறு மாத உறைவிடப் பயிற்சி மையம், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,100 கோடி செலவில் கோயம்புத்தூரில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா, இலவச வை பை வசதிகள், தேயிலை சிறு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை ஆகிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து டேக்ட் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், “தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்பு அனைத்து தரப்பினருக்கும் பூர்த்தி செய்யும் விதமாக இருந்தாலும், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வருத்தத்தை தரும் அளவிற்கு தான் அறிவிப்பு இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பு அனைத்து துறைக்கும் இருந்தது அனைவரும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கோவைக்கு 1140 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, பெரிய நூலகம் அமைக்கப்படுவது வரவேற்க கூடியது. அதேசமயம் மின்கட்டண உயர்வை திரும்ப பெறும் அறிவிப்பு இல்லை.
வளர்ச்சி நிறைந்த மாவட்டமாக கோவை இருக்கும் சூழலில் உள்கட்டமைப்புக்கு எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை. 13 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தனி ஒதுக்கீடு இல்லை என்பது வருத்தத்தை அளிக்க கூடியது. கோவை மாவட்டத்திற்கு தொழில் வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டு வருகிறது. மாவட்டத்திற்கு உள்கட்டமைப்புக்கு தனி நிதி ஒதுக்கவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஏன் இன்னும் நிதி கொடுக்காமல் பின் வாங்குவது என்பது எதுவும் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu