நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமது இலக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

கோவையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் நாற்பது தொகுதியிலும் வெற்றி பெறுவது தான் நமது இலக்கு என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோவை நரசிபுரத்தில் நடந்தது. தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சாமிபையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் முதல்-அமைச்சர் பாகுபாடு இன்றி செயல்பட்டு வருகிறார். தமிழக முதல்வர் சிறப்பு திட்டத்தின் கீழ் இதுவரை கோவை மாவட்டத்திற்கு ஊராட்சிகளில் சாலைகள் அமைப்பதற்கான ரூ.68 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். முதல்-அமை்சர் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்து செயல்படுத்தி வரும் திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் இலக்காக இருக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் திமுக தொண்டர்கள் இப்போது தேர்தல் பணியை தொடங்க வேண்டும். நமது உழைப்பின் பலன் தான் நாற்பது தொகுதிகளை நமக்கு பெற்று தரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம், மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.பி. நாகராஜன், துணை மேயர் வெற்றிச்செல்வன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu