மேட்டுப்பாளையத்தில் கணவன்- மனைவியை தாக்கிய 2 இளைஞர்கள் கைது

மேட்டுப்பாளையத்தில் கணவன்- மனைவியை தாக்கிய 2 இளைஞர்கள் கைது
X
மேட்டுப்பாளையத்தில் கணவன்- மனைவியை தாக்கிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கணவன் மனைவியை தாக்கிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் சாலை வெல்ஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (30). இவர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீராம் இவரது மனைவியுடன் பெட்டி கடையில் இருந்துள்ளார். அப்போது கடைக்கு வந்த ஜடையம்பாளையம் புதூர் குறிஞ்சி நகரை சேர்நத அருண்குமார் (25), சிறுமுகை சக்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த தீபக்(21) ஆகியோர் அங்கு வந்தனர்.

அவர்கள் கடையில் இருந்த ஸ்ரீராம் மற்றும் இவரது மனைவி ஆகியோரிடம் குடிபோதையில் தண்ணீர் பாட்டில் வாங்கிய பின் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தட்டி கேட்டபோது ஆத்திரம் அடைந்த அவர்கள் ஸ்ரீராமையும் இவரது மனைவியையும் அருண்குமார், தீபக் ஆகியோர் தாக்கி உள்ளனர்.

கடையில் வந்து தகராறு செய்தது பற்றியும், தங்களை தாக்கியது பற்றியும் ஸ்ரீராமும் அவரது மனைவியும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அருண்குமார், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கணவன் மனைவியை தாக்கிய அவர்கள் இருவரும் இதற்கு முன் ஏதாவது வழக்கில் கைதாகி உள்ளார்களா? அவர்களின் பின்னணி என்ன? வேறு போலீஸ் நிலையங்களில் அவர்கள் மீது வழக்கு உள்ளதா? அவர்கள் சரித்திர பதிவேடு குற்றவாளிகளா? என்கிற அடிப்படையிலும் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

Tags

Next Story