கோவையில் புறா பந்தய போட்டிகள் ; 16 புறாக்கள் பங்கேற்பு

கோவையில் புறா பந்தய போட்டிகள் ; 16 புறாக்கள் பங்கேற்பு
X

Coimbatore News- பந்தயத்தில் பங்கேற்ற புறாக்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

Coimbatore News- புலியகுளம் பகுதியில் ஆண்டுதோறும் கூண்டுகளில் வளர்க்கப்படும் புறாக்களுக்கான பந்தயங்கள் நடைபெறுகிறது.

Coimbatore News, Coimbatore News Today-கோவையில் பல்வேறு பகுதிகளில் புறா பந்தய போட்டிகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் ஆண்டுதோறும் கூண்டுகளில் வளர்க்கப்படும் புறாக்களுக்கான பந்தயங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பீஜியன் பிரண்ட்ஸ் அசோசியேசன் சார்பில் 19 வது ஆண்டு புறா போட்டிகள் புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் மொத்தம் 16 கூண்டு அணிகள் பங்கேற்றன. முன்னதாக புறாக்களுக்கு பந்தய அடையாளமாக ஒருங்கிணைப்பாளர் சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து காலை 7 மணிக்கு போட்டியில் புறா உரிமையாளர்கள் புறாக்களை பறக்க விட்டனர். இந்த சாதா புறாக்கள் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் பறக்க வேண்டும். எட்டு மணிக்குள் கூண்டில் அமர வேண்டும். இதை வைத்து முதல் இரண்டு, மூன்று பரிசுகள் தேர்வு செய்யப்படுவார்கள். மாலை 8 மணியை தாண்டி புறா பறந்தால் புறா போட்டியில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும். இந்த புறாக்கள் கூண்டில் அமர்வதை கண்காணிக்க போட்டி நடத்துபவர்கள் சார்பில் கண்காணிப்பாளர்கள் கூண்டு அருகே இருந்து புறாக்களை தேர்வு செய்வார்கள். இதில் வெற்றி பெறும் புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!