கோவையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

கோவையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

கோவை அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106- வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

அதிமுக நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது

கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106- வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அ.தி.மு.க .வினர் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்ஜூனன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அவினாசி ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் கட்சி அலுவகத்தில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி, மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கே.ஆர். ஜெயராம், அவைத்தலைவர் சிங்கை முத்து, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் லாலிரோடு ராதா, ஜெயலலிதா பேரவை செயலாளர் பிரபாகரன், ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.ஜப்பார், காந்திபுரம் பகுதி செயலாளர் ராஜ்குமார், இலக்கிய அணி செயலாளர் புரட்சித்தம்பி, சிங்கை பாலன், பார்த்திபன் , எஸ்.ஆர்.ரவி, உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!