இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தை எதிர்த்து கோவையில் ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தை எதிர்த்து கோவையில் ஆர்ப்பாட்டம்
X

இந்தி திணிப்பை எதிர்த்து கோவையில் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்தி திணிப்பு திட்டம் மற்றும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் தலைமையில் 1000 க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் (11வது தொகுதி), மத்திய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம். எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

இதற்கு பல்வேறு மாநில அரசுகள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுகவின் இளைஞர் அணி சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தொண்டாமுத்தூர் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் எம் எல் ஏ நா. கார்த்திக் பேசுகையில், தமிழ்நாட்டில் தமிழ் பேசுகின்றோம். கேரளாவில் மலையாளம், ஆந்திராவில் தெலுங்கு) பேசுகிறார்கள். ஓடிசாவில் ஒடிசா மொழியும் மராத்தி மொழி பேசுகின்றனர். இப்படி பல மொழிகள் பேசப்படுகின்ற கலை கலாச்சாரங்கள் பண்பாடு கொண்ட பல மதங்களைக் கொண்ட மக்கள் வாழுகின்ற பன்முக கொண்ட நாடு தான் இந்தியா. ஆங்கிலேயருடைய விடுதலைக்கு பின் தான் இந்தியா என்ற நாடு உருவானது. ஆனால் இன்றைக்கு இந்தி என்ற மொழியை பாஜக கையில் எடுத்திருக்கிறது.

மத்திய அரசு இந்தி மொழியை பல்வேறு வழிகள் திணிக்க பார்க்கிறது. மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு ஆங்கிலத்தில் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும் என்றும் இந்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இது நமது எதிர்கால சந்ததிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.

இந்திய இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மாநிலங்களில் உரிமையை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையை மத்திய அரசு திணிக்க கூடாது என்று கூறினார்.

தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் என மொத்தம் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story