கோவையில் மக்கள் கூடும் மைதானங்களில் பட்டாசு வெடிக்க தடை: மாநகர காவல் ஆணையர்
கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்
கோவை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அங்கு பல்வேறு தினுசுகளில் புதியரக பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
எனவே பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு வந்திருந்து பட்டாசு கடைகளில் விற்கப்படும் வெடிகளை வாங்கி செல்கின்றனர். இதனால் அங்கு பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதற்கிடையே தீபாவளி பட்டாசுகள் வெடிக்க தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர்பாலகிருஷ்ணன் கூறுகையில்,
தீபாவளி பண்டிகையின்போது காலை 6-7 மற்றும் இரவு 7-8 ஆகிய நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற தரமான பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பட்டாசு கடைகளில் சரவெடி விற்க தடைசெய்யப்பட்டு உள்ளது. அதனை வாங்கி வெடிப்பதும் சட்டப்படி குற்றம். மேலும் குறைந்தபட்சம் 125 டெசிபல் வரை சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பது நல்லது.
கம்பி மத்தாப்பு, புஸ்வானம் வெடிக்கும்போது பக்கத்தில் தண்ணீர் மற்றும் மணல்வாளிகள் இருக்க வேண்டியது அவசியம். குனிந்த நிலையில் பட்டாசுகளை பற்ற வைக்க கூடாது. சிகரெட் லைட்டர்களை பயன்படுத்துவது ஆபத்து தரும்.
பட்டாசு வெடிக்கு ம்போது நீண்ட பத்திகளை பயன்படுத்த வேண்டும். வெடி போடும்போது வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவைக்க வேண்டும். தளர்வான பருத்தி ஆடை அணிந்து செருப்பு போட்டுக்கொண்டு பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டால் பாதிப்புக்கு உள்ளான இடத்தில் குளிர்ந்த நீரை எரிச்சல் அடங்கும்வரை ஊற்ற வேண்டும். பின்னர் காயம்பட்டவரை மருத்துவமனைஅழைத்து செல்ல வேண்டும். சுயமருத்துவம் பார்க்கக்கூ டாது.
வெடிக்காத பட்டாசு களை சேகரித்து புஸ்வாணம் வைப்பது ஆபத்தில் முடிந்து விடும். மேலும் சிம்னி விளக்கு, குத்துவிளக்கு, மெழுகு வர்த்தி மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்களுக்கு அருகில் வெடி வெடிக்கக்கூடாது.
அணுகுண்டு வெடிக்கும் முன்பாக குழந்தைகளை வீட்டுக்குள் அனுப்பிவிட வேண்டும். மேலும் பாட்டில்கள், டப்பா மற்றும் தேங்காய் சிரட்டைகளில் பட்டாசு வைத்து வெடிக்க கூடாது.
பொறுப்பின்றியும், விளையாட்டுதனமாகவும், குடிபோதையிலும் பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவமனைகள், கிளினிக், கல்வி நிலையங்கள், நீதிமன்றம், கோவில்கள் உள்ளிட்ட அமைதி பகுதிகளில் பட்டா சுகள் வெடிக்கக்கூடாது. போக்குவரத்து சாலைகளி லும் வெடிபோட அனுமதி இல்லை. மக்கள் அதிகம் கூடும் கோவை வ.உ.சி மைதானம், கொடிசியா மைதானங்களில் பட்டாசு வெடிக்க கூடாது.
திறந்தவெளி மைதானங்களில் ராக்கெட் வெடி போட தடை இல்லை. அதேநேரத்தில் இது பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu