தீபாவளி பண்டிகை: கோவையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தீபாவளி பண்டிகை: கோவையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
X

சிறப்புப் பேருந்துகள் - கோப்புப்படம் 

சிங்காநல்லூர், சூலூர் பேருந்து நிலையங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பேருந்து,ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி திங்கள்கிழமை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் கோவையில் இருந்து நேற்று மாலை முதல் பேருந்துகள், ரயில்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை, தேனி, மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்தும். கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்தும். ஈரோடு, சேலம், நாமக்கல் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும். ஊட்டி, கூடலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்த தற்காலிக பேருந்து நிலையங்க ளுக்கு காந்திபுரம், உக்க டத்தில் இருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை முதல் மதுரைக்கு 100 பேருந்துகளும், திருச்சிக்கு 80, தேனிக்கு 50, சேலத்துக்கு 60 என மொத்தம் 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

நேற்று மாலை முதல் பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் பேருந்துகளின் இயக்கம் குறித்து பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்புகள் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் ரோந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு பேருந்துகள், ரயில்கள், கார்கள் மற்றும் விமானம் மூலமாக 4 லட்சம் பேர் வரை சென்றது தெரிய வந்துள்ளது.

இது அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், சூலூர் பேருந்து நிலையங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இன்று பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்னும் கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil