சென்னையில் தினமும் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

சென்னையில் தினமும் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
X
-மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் வீடு வீடாகக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், தடுப்பூசி என மூன்று வடிவங்களில் சென்னை மாநகராட்சி செயல்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:

களப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை உடனடியாகக் கண்டறிவார்கள். அவர்களுக்கு எங்களுடைய மருத்துவ முகாம்களில் பரிசோதனை நடத்தி, தொற்று இருந்தால் அதற்கு அடுத்த நடைமுறைகளைத் தொடங்குவோம். கடந்த ஆண்டு 12,000 களப்பணியாளர்களை வைத்து கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டோம். இந்த ஆண்டு 6,000 களப் பணியாளர்களை வைத்து ஆரம்பித்துள்ளோம்.

தற்போது தேர்தல் காலமானதால் தினசரி 35,000 பேர் வரை தடுப்பூசி போட்டு வந்தது சற்று குறைந்தது. இனி வரும் காலங்களில் மீண்டும் வேகமாகக் கொண்டு வர உள்ளோம். அதன் மூலம் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் பேர் வரைக்கும் தடுப்பூசி போடப்போகிறோம். இதன் மூலம் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள் 20 முதல் 25 லட்சம் பேருக்குப் போட்டுவிட முடியும் என கூறினார்.

Tags

Next Story
ai and future of education