சாலையில் தனியே நடந்து சென்ற பெண்ணை மானபங்கம் செய்த நபர் கைது

சாலையில் தனியே  நடந்து சென்ற பெண்ணை மானபங்கம் செய்த நபர் கைது
X
மதுபோதையில் சாலையில் தனியாகச்சென்ற பெணணை மானபங்கம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை போலீஸார் சிறைக்கு அனுப்பி வைத்தனர்

திருவொற்றியூர் அடுத்த புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் 22 வயதான பெண் ஒருவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் இதனை அடுத்து நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம்போல் பேருந்தில் ஏரி வீட்டிற்கு திரும்பி வரும் போது புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்

இரவு 11 மணி என்பதால் ஆட்கள் நடமாட்டம் சற்று குறைவாக இருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர் பெண்ணை வழிமறித்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே அப்பெண் கூச்சலிட்டதைக் கேட்ட அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மர்ம நபரை பிடித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த பின்னர் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புதுவண்ணாரப்பேட்டை காவலர்கள் மர்ம நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்ட பொழுது வேளச்சேரி பகுதியைச் சார்ந்த ராஜசேகர்(36) என்பதும், ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. மேலும் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது நண்பருடன் மது அருந்திவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி செல்லும் போது, சாலையில் தனியே வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து மானபங்கபடுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜசேகரை நான்கு சட்டங்களுக்கு கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!