அதிமுக ஆட்சியில் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் முறைகேடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அமைச்ச்ர மா.சுப்பிரமணியன்.
சென்னை சைதாப்பேட்டையில் பொதுமக்கள் மற்றும் சிறுகுறு தொழில் செய்பவர்கள் தங்கள் கைவினை பொருட்களை, கட்டணமின்றி ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்கான புதிய இணையதளத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்தே அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் இருக்கும்.
கொரோனா பேரிடர் காலங்களில் மருத்துவ பணியாளர்களுக்கான உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு நபரின் ஒரு நாள் உணவு செலவு ரூ.570 முதல் 600 ரூபாயாக இருந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது உணவகமே வைத்திருக்காதவர்கள் வெளி இடத்தில் உணவை வாங்கி முறைகேடாக பணம் பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.
தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறந்த உணவகங்களில் அரசே நேரடியாக பேசியதன் விளைவாக திமுக ஆட்சியில் ஒரு நபரின் உணவின் விலை தற்போது 350-450 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த அரசை காட்டிலும் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் ரூபாய் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவிலிருந்து சேமிக்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசிகள் அளவை மத்திய அரசு மக்களிடம் தெரிவிக்க கூடாது என கூறியுள்ளது. தடுப்பூசி குறித்து மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும். தற்போது 1060 தடுப்பூசிதான் கையிருப்பில் உள்ளது. மத்தியற அரசு தடுப்பூசிகளை அனுப்பியதும் மாவட்டங்களுக்கு பிரித்தளிக்கப்படும். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 45,484 படுக்கைகள் காலியாக உள்ளது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu