கள்ளக் காதலுக்கு இடையூறு மகனை கொலை செய்த, பாசக்கார தாய்

கள்ளக் காதலுக்கு இடையூறு மகனை கொலை செய்த, பாசக்கார தாய்
X

பைல் படம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம் அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி 55. இவரது மகள் துர்கா, நெடுவரம்பாக்கம் கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

துர்காவின் மூத்த மகன் தனசேகர், 14, தாத்தா கோவிந்தசாமி வீட்டில் தங்கி, 9ம் வகுப்பு படித்து வந்தார்.நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுடன் சென்ற தனசேகர், வீடு திரும்பவில்லை.

இது குறித்து, சோழவரம் போலீசார் விசாரித்ததில், தாய் துர்காவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோபால், 21, என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

தாயின் கள்ளத் தொடர்பை அறிந்த தனசேகர், அது குறித்து தந்தையிடம் தெரிவிக்க முயன்றார். இதை துர்கா, கள்ளக்காதலன் கோபாலிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கோபால், அதே பகுதி கோவில் குளத்தில், தனசேகரை மூழ்கடித்து கொலை செய்தது தெரிந்தது.தனசேகரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், துர்கா மற்றும் கோபாலை நேற்று கைது செய்தனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து, தாயே மகனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
புதுவலவு காலனியில் களைகட்டிய சமுதாயக்கூட திறப்பு விழா..!